கோவிலின் சிறப்பம்சங்கள்
பயணத்தின் முதல் இலக்கு குல தெய்வம் கோவில் ஆயிரம் தெய்வம் நாம் வேண்டும் போது ஓடோடி ,கூடவே இருந்து காக்கும் தெய்வம் நம் குலம் காக்கும் குல தெய்வம்
பயணத்தின் முதல் இலக்கு குல தெய்வம் கோவில் ஆயிரம் தெய்வம் நாம் வேண்டும் போது ஓடோடி ,கூடவே இருந்து காக்கும் தெய்வம் நம் குலம் காக்கும் குல தெய்வம்
குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவோம். நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். நம் வழக்கப்படி, குலதெய்வத்துக்குப் படையலிட்டுப் பிரார்த்தனைகள் செய்வோம். சகல பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் தந்தருளுவார்கள்.
குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுகிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுகிரகமும் இல்லை என்றும், குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.
குல தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் வரம் கிடைக்கும். சாதி, மதம், இனம் பாராமல் இன்றளவும் கிராமபுற மக்கள் ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கிறது. குழந்தை பாக்கியம் சித்திக்கும், தொழில் அபிவிருத்தி அடையும். நீங்கள் எத்தனை பெரிய கோயில்களுக்கு சென்றாலும் குலதெய்வத்தின் அருள் இல்லாமல் அனுக்கிரகம் கிடைக்காது. குலதெய்வம் அவ்வளவு சக்தி வாய்ந்தது.
அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது.
ஸ்ரீ அருள்மிகு சந்திவீரப்ப சுவாமி திருக்கோயில்
வளையெடுப்பு, முசிறி
info@yaacreations.com
info@santhiveerapa.com
+91 94861 58563
+91 76392 92078